Movie Reviews

  • Home/
  • Reviews/
  • வெள்ளைப்பூக்கள் படம் விமர்சனம்

வெள்ளைப்பூக்கள் படம் விமர்சனம்

நகைச்சுவை நடிகர் "விவேக்"கின் புதிய அவதாரமாக முழு நேர நாயகனாக "வெள்ளை பூக்கள்" படத்தில் நடித்துள்ளார். அமெரிக்காவை முழுக்க கதைக்களமாக கொண்ட படத்தில்; ஓய்வு பெற்ற காவல்துறையின் அதிகாரி ருத்ரன் (விவேக்) அமெரிக்காவில் தன்னை பிரிந்து வாழும் மகனை சந்திக்க செல்வதில் படம் துவங்குகிறது. 
 
விவேக்கின் மகனுடைய பக்கத்து வீட்டில் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றது. இதை பார்க்கும் ருத்ரன் தன்னுடைய சொந்த விருப்பத்தினால் தானாக முன்வந்து தனி ஆளாக இந்த கடத்தல் சம்பவங்களை புலனாய்வு செய்கிறார். இன்னொரு பக்கம் ஒரு இளம் குழந்தையை அதன் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்கிறார். இந்த இரண்டு கதைகளும் மாரி மாரி வருகின்றது. இவை இரண்டும் சந்திக்கும் புள்ளி என்ன? ருத்ரன் எவ்வாறு குற்றவாளியை கண்டுபிடிக்கிறார் என்பது தான் வெள்ளைப்பூக்கள்.

அமெரிக்க இயக்குனர் இளங்கோவன் இந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் தேர்ந்த எழுத்து மற்றும் சிந்தனையால் எதிர்காலத்தில் பெரிய இடங்களை சென்றடைவர் என்று நம்பிக்கை பிறக்கிறது. ருத்திரன் குற்றத்தை கண்டு பிடிக்கும் முறை, குற்ற பின்னணியில் பேசும் வசனங்கள், படத்தின் கிளைமாக்ஸ், யாவும் படத்தை நியாயப்படுத்தகிறது. குறிப்பாக படத்தின் முதல் காட்சியே படத்தின் கரு இது தான் படம் இப்படி தான் இருக்கும் என்று ரசிகர்களை தூண்டுகிறது.

ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான அணைத்து விஷயங்களும் படத்தில் உள்ளன. இயக்குனர் சரியான நேரத்தில் தேவை இல்லாத கதாப்பாத்திரங்களை உள்ளே நுழைத்து; ரசிகர்களை குழம்ப வைத்து; பின்னர் தெளிய வைப்பது த்ரில்லர் படத்தின் கூடுதல் சிறப்பு. வெள்ளைபூக்கள் படத்தில் லாஜிக்கல் தவறு என்று நமக்கு எழும் கேள்விகளுக்கு படத்திலேயே பதிலும் வைத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் முதல் பாதியில் தேவையில்லாத காட்சிகளை நீண்டநேரம் வைத்திருக்கிறார் இயக்குனர் அது ரசிகர்களை நெளிய வைக்கிறது. அமெரிக்காவை களமாக கொண்டதால் நமக்கு அறிமுகம் இல்லாத நிறைய முகங்கள் படத்தில் வருகின்றன அவற்றோடு ரசிகர்கள் ஒட்டி படம் பார்க்க முடியவில்லை.

படத்தின் பின்னணி இசை பாடல்கள் யாவும் படத்திற்கு கைகொடுக்கவில்லை. சிறிய தயாரிப்பு படம் என்பதாலோ என்னவோ இது போன்ற விஷயங்களில் கவனம் சற்று குறைவாக உள்ளது படத்தில். படத்தொகுப்பு படத்தோடு ஒன்றவே இல்லை. மேலும் படத்தின் உருவாக்கத்தில் சிறு சிறு குளறுபடிகள் திரையிலேயே தெரிகின்றது. தயாரிப்பு நிர்வாகம் ஒழுங்காக இல்லாததால் சிறந்த எழுத்து திரையில் வெளிப்படவில்லை. நல்ல திரில்லர் படமாக வரவேண்டிய வெள்ளைப்பூக்கள் அதன் தன்மையை இழந்துவிட்டது.

வெள்ளைப்பூக்கள் - மலராத மொட்டு 

(2.5 / 5)

Rating :

0 1 2 2.5/5
share