Movie Reviews

  • Home/
  • Reviews/
  • வில் அம்பு படம் விமர்சனம்

வில் அம்பு படம் விமர்சனம்


நம் வாழ்க்கை நம் கையில் மட்டும் இல்லை நம்மை சுற்றி உள்ளவர்களிடம் இருக்கிறது என்ற ஒரு கருத்தை மையமாக வைத்து கதையை நகர்த்திருக்கிறார் இயக்குனர்.


போட்டோகிராபியில் நல்ல ஆர்வமான ஹரீஸ், தனது அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத நல்ல ஒரு பையனாக வருகிறார். ஹரீஸ்க்கு சிருஷ்டி டாங்கேவுடனான காதல் என அமைதியான வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. ஹரீஸை ஒரு தலையாக காதலித்து  வருகிறார் சேரிப்பகுதியில் வாழ்ந்து வரும் சாந்தினி.

ஹரீஸ்க்கு நேர் எதிரான ஒரு ஹீரோ தான் ஸ்ரீ. இவர்  சேரிப்பகுதியில் வாழ்ந்து வருகிறார். சின்ன சின்ன திருட்டு, சின்ன சின்ன அடிதடி, அவரது தவறுகளை சரி என்று ஏற்றுக்கொள்ளும் குடிகாரதந்தை என சென்று கொண்டிருக்கிறார் ஸ்ரீ. .

ஸ்ரீ செய்யும் பல தவறுகளில் மறைமுகமாக அடிக்கடி சிக்கிக் கொள்கிறார் ஹரீஸ். மது பழக்கம், ஜெயில் என ஹரீஸ் வாழ்க்கை தலைகீழ் கொள்கிறது. ஸ்ரீயின் தைரியத்தை பார்த்து காதல் வலையில் விழுகிறார் சம்ஸ்க்ருதி. தன்னையும் ஒரு பெண் காதலிக்கிறாள் என்று இனி எந்த ஒரு தவறான செயலுக்கும் செல்லக்கூடாது என முடிவெடுத்து நல்லவனாக வாழ்க்கையை நடத்த முடிவெடுக்கிறார். திருந்தும் சமயத்தில் பல இன்னல்களை சந்திக்கிறார் ஸ்ரீ.

இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கைக்கு எதிரான இன்னல்களில் இருந்து ஜெயித்தார்களா?? என்பதே மீதிக்கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியன். 

நல்ல ஒரு கதையை கையில் எடுத்ததற்காக இயக்குனருக்கு ஒரு பெரிய சல்யூட் வைக்கலாம். நடிகர் ஸ்ரீ இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை. அப்படியொரு அருமையான, எதார்த்தமான ஒரு நடிப்பை வெளிகாட்டியிருக்கிறார். தனக்கு பிடித்த படப்பை படிக்க முடியவில்லை என்ற ஏக்கம், அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியவில்லை, செய்யாத குற்றத்திற்கு தண்டனை என பல இன்னல்களை கையில் எடுத்து ஒரு அமைதியான ஹீரோவாக வாழ்ந்திருக்கிறார் ஹரீஸ்.

ஹரீஸை ஒரு தலையாக காதலித்து வரும் சாந்தினி சேரிப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். 18 வயது கூட நிரம்பாத ஒரு பள்ளி மாணவியாக வரும் சம்ஸ்க்ருதி ஸ்ரீயை காதலிக்கும் போது அவரது பாவனைகள் ரசிக்க வைக்கிறது.

நவீன் இசையில் பின்னணி இசை சூப்பர், பாடலில் அனிருத் குரலில் ஆள சாச்சுபுட்டா பாடலை ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறது. மார்ட்டீன் ஒளிப்பதிவு அருமை. படத்தின் நீளத்தை மட்டும் சற்று குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 

யோகி பாபுவின் பஞ்ச வசனங்கள் சிரித்து சிரித்து வயிறை பதம் பார்க்க வைக்கிறது. கடைசி நிமிட காட்சிகள் வரை இதயத்துடிப்பை அதிகரிக்க வைக்கிறது. 

வில் அம்பு - வெற்றிக்கான அம்பு தான்!!!

Rating :

0 1 2 3 3.7/5
share