வி ஐ பி 2 படம் விமர்சனம்



தனுஷ் தனது திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமாக ஒரு பிரேக்காக அமைந்த படம் தான் வேலையில்லா பட்டதாரி (வி ஐ பி). இப்படத்தின் மிகப்பெரிய பலம் சாதாரணமான ஒரு கதையமைப்பு, மேக்கிங் என அனைத்தும் ஒருசேர அமைந்தது தான். 

வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தான் இப்போதைய ட்ரெண்ட். முதல் பாகத்தின் வெற்றி ராசி இப்படத்தின் மீதும் விழுந்ததா என்பதை விமர்சனம் மூலம் காணலாம். 

கதைக்களம்:

முதல் பாகத்தின் டெம்ப்ளேட் தான் இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்திருக்கிறது.    

தனுஷ் - அமலா பால் இருவருக்கும் திருமணம் முடிந்திருக்கிறது. அதே சாதாரண கம்பெனியில் ஒரு இஞ்சினியராக பணி புரிகிறார் தனுஷ்(ரகுவரன்).

ஒரு சின்ன ப்ராஜக்ட் மூலம் மிகப்பெரிய கன்ஸ்ட்ரக்‌ஷன் நிர்வாகத்தின் ஓனராக வரும் கஜோலின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார் தனுஷ். 

இருவருக்கும் நடக்கும் ஒரு மோதலே படத்தின் மீதிக் கதை.

விமர்சனம்:

ரகுவரனாக வாழ்ந்து தனி ஒருவனாக படத்தை ஒட்டுமொத்தமாக தூக்கி சுமந்து செல்கிறார் தனுஷ்.   குடித்து விட்டு மனைவியிடம் திட்டு வாங்குவதும், அப்பாவின் ஆறுதல் வார்த்தைகளை கேட்கும் போதும், பக்கத்து வீட்டில் நடக்கும் ஒரு கதாபாத்திரத்தை வழக்கம் போல் கண்முன்னே நிறுத்தி செல்கிறார் தனுஷ்(கொஞ்சம் எக்ஸ்ட்ராவே இருக்கு) . நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷின் மிரட்டல் நடனம் அசத்தல். 

படத்தின் நாயகியாக அமலாபால், தனுஷின் மனைவியாக நடித்திருக்கிறார். மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு  தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்திருக்கிறார் கஜோல். ஒரு உயர்ந்த நிர்வாகத்தை நிர்வகிப்பதில்,    தனி ஒரு பெண்ணாக கம்பெனியை தூக்கி எடுத்து வந்த திறமை,   தனுஷிடம் விடும் சவால் என அனைத்திலும் கிரேஸ் தான்.

விஐபி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் படத்தில் இருந்த அந்த யதார்த்தம், சிம்ப்ளிசிட்டி, காட்சியமைப்பு மட்டுமே. இந்த மூன்றும் விஐபி2-ல் கொஞ்சம் குறைந்த ஒரு ஃபீல். 

சமுத்திரக்கனி பொறுப்பான தந்தையாக அவ்வப்போது ஆறுதல் கூறிவிட்டு செல்கிறார். தங்கபுஷ்பம் கணவராக விவேக் வழக்கம் போல் கலகலப்பூட்டுகிறார். 

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னனி இசையில் ஷான் மிரட்டியிருந்தாலும் அனிருத்தின் தீம் வரும் போது திரையரங்கம் அதிர்கிறது.  சமீர் தாஹீர் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது. 

மேக்கிங்கில் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது திறமையை நிரூபித்துள்ளார். திரைக்கதையில் இன்னும் சற்று வலு இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. முதல் பாதியில் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் இடங்கள் பல உள்ளன.

விஐபி 2 - வி ஐ பி-லிருந்து கொஞ்சம் விலகி தான் நிற்கிறது. 

Rating :

0 1 2 2.8/5
share