Movie Reviews

  • Home/
  • Reviews/
  • வாகா படம் விமர்சனம்

வாகா படம் விமர்சனம்



இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியை தான் ‘வாகா’ என அழைப்பார்கள். இந்த பகுதியில் அமைதியான நாட்களை விட பதற்றமான காலகட்டங்கள் தான் அதிகமாக இருக்கும்.

அப்படிப்பட்ட பகுதிகளை சுற்றி எடுக்கப்பட்ட விக்ரம் பிரபுவின் நடிப்பில் உருவாகியுள்ள ’வாகா’ படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிகிறார் விக்ரம்பிரபு. அங்கு படத்தின் நாயகி ரன்யாவை காண்கிறார். கண்டது அவர் மேல் காதல் ஏற்படுகிறது. வழக்கம் போல் காதலியின் பின்னால் காதலன் சுற்றுகிறார்.

ஒரு கட்டத்தில் அந்த காதலை ரன்யாவிடம் தெரிவிக்கிறார் விக்ரம் பிரபு. அந்த தருணத்தில் தான் அங்கு ஒரு கலவரம் நிகழ்கிறது. பாகிஸ்தான் நாட்டவர்கள் அனைவரும் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அப்போது தான் விக்ரம் பிரபுவிற்கு தெரிய வருகிறது தான் காதலித்தது ஒரு பாகிஸ்தான் பெண் என்று.

ரன்யா செல்லும் பேருந்தை தீவிரவாதிகள் எரித்துவிட, அதிலிருந்து தப்பி விடுகிறார் ரன்யா. விக்ரம் பிரபு எல்லை கடந்து பாகிஸ்தான் நாட்டிற்குள் சென்று அவரை விட நினைக்கிறார். செல்லும் போது ரன்யாவிற்கு விக்ரம் பிரபு மேல் காதல் வர, பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்படுகிறார் விக்ரம் பிரபு.

அங்குள்ள ஒரு சிறையில் மிகவும் சித்ரவதை செய்யப்படுகிறார் விக்ரம்... அந்த சிறையில் இருந்து விக்ரம் தப்பித்தாரா..??? தன் காதலியின் கரம் பற்றினாரா?? என்பதே படத்தின் மீதிக் கதையாக தந்திருக்கிறார் இயக்குனர் குமாரவேலன்.

விக்ரம் பிரபு ஒரு படைவீரனாகவே வாழ்ந்திருக்கிறார். ஆனால் ஒரு பாதுகாப்பு படை வீரருக்கான காட்சி அமைப்பு பலம் இல்லாதது படத்திற்கு பெரும் இழப்பு தான். ரன்யா படத்தின் நாயகி. படத்தின் ஆரம்பத்தில் அழகாக தெரியும் ரன்யா, போக போக படம் முழுவதும் அழுதுகொண்டே இருக்கிறார்.

சதீஷ்குமாரின் ஒளிப்பதிவில் காஷ்மீரை மிகவும் அழகாக பார்க்க முடிகிறது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தங்களது பார்வையிலேயே மிரட்டல் லுக்கை கொடுத்திருக்கிருக்கிறார்கள். பாகிஸ்தான் சிறையில் இந்திய வீரர்கள் படும் இன்னல்களையும் படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர் குமாரவேலன்.

இமானின் இசையில் பாடல்கள் எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை சற்று கைகொடுத்திருக்கிறது. படத்தின் கதை பல படங்களில் சாயலாகதான் தெரிகிறது. திரைக்கதையை இன்னும் சற்று பலமாக கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ராணுவ பின்னணியில் எடுக்கப்பட்டமையால் சற்று ஆறுதல் கொடுக்கும் படியாக வருகிறது இந்த ‘வாகா’..

Rating :

0 1 2 2.3/5
share