Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ஜீரோ படம் விமர்சனம்

ஜீரோ படம் விமர்சனம்

ஹீரோவாக வரும் அஸ்வின் ஒரு சமூக சேவகராக வருகிறார். நாயகி ஷிவேதாவை கண்டு அவர் மீது காதல் வயப்படுகிறார். ஷிவேதாவும் அஸ்வின் மீது காதல் வயப்படுகிறார். இந்த காதலுக்கு அஸ்வினின் தந்தை ரவி ராகவேந்திரா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அவர் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஷிவேதா தாய், தந்தையினரை சிறு வயதிலேயே இழந்தவர். அம்மா எழுதிய டைரியை படித்து வளர்கிறார். தன் அம்மா ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் என அந்த டைரியை பார்த்து தெரிந்து கொள்கிறார்.

சில நாட்களில் ஷிவேதாவின் கனவுகளில் ஒரு உலகம் தென்பட அந்த உலகத்தின் தன் அம்மாவை பார்க்கிறார். அவர் சொல்லும்படி அனைத்தையும் செய்கிறார். தன் மகளை தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டும் என ஷிவேதாவின் தாயார் நினைக்க, அந்த உலகம் உண்மையல்ல பொய் என பல முறை உதாசிணப்படுத்தியும் மீண்டும் மீண்டும் அந்த உலகிற்கு செல்கிறார் ஷிவேதா.

ஒரு கட்டத்தில் நிரந்தரமாக அந்த உலகத்தில் இருந்து விட, அதன் பின் அஸ்வின் என்ன முயற்சி செய்தார்?? ஷிவேதாவை அந்த மாய உலகில் இருந்து காப்பாற்றினாரா?? இல்லையா??? என்பதே மீதிக் கதை...

ஒரு அழகான ஆப்பிள் பாயாக வந்து காதல் செய்வதில் அசத்தியிருக்கிறார் அஸ்வின். மனைவிக்குள் ஏற்படும் அந்த மாற்றத்தால், அவர் வருந்தும் காட்சியில் அவர் மனைவி மீது வைத்திருக்கும் காதலை வெகுவாகவே வெளிக்காட்டுகிறது.. 

ஷிவேதா தன் நடிப்பில் பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார். படம் முழுக்க ஷிவேதவை வைத்தே கதை நகர்வதால் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படுகிறது. முகபாவனைகளிலும், கண் அசைவுகளிலும் தனது நடிப்பை மிகவும் அருமையாகவே பூர்த்தி செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இந்த கதை ஒரு புதுமையான முயற்சி தான், கதையை உருவாக்கியதற்காக இயக்குனரை பாராட்டலாம். முதல் பாதியில் படத்தின் கதையை கூற வருவதாக நினைத்து தலைசுற்ற வைத்து அருமையாக போரடிக்க வைத்து விடுகிறார்கள்.

இரண்டாம் பாதியினால் தான் கதை கொஞ்சம் உயிர் பெற்று நிற்கிறது. கதையில் என்ன சொல்ல வருகிறோமோ அதை மட்டும் சொல்லியிருந்தால் சற்று நலமாக இருந்திருக்கும், அதை விட்டுவிட்டு எங்கே எங்கோ கதை பயணம் செய்து வருவது எரிச்சலடைய வைத்துவிடுகிறது.. 

சிஜி வேலைகள் கொஞ்சம் ரசிக்கும் படியாக இருந்தது. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் ஒரு பாடல் மட்டுமே கேட்கும் ரகம். பின்னனி இசையினை பல படங்களில் கேட்டது போன்று தோன்றுகிறது...பாபுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று பலம்..

ஜீரோ - இன்னும் அதிகமாகவே மிரட்டியிருக்கலாம்...

Rating :

0 1 2 2.5/5
share